உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது | சவுமியா அன்புமணி | Lok Sabha Election Result

ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது | சவுமியா அன்புமணி | Lok Sabha Election Result

லோக்சபா தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாததால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் பா.ம.க.,வின் கனவு தகர்ந்துள்ளது. 1989ல் துவங்கப்பட்ட பா.ம.க., 1998 அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் 4 எம்.பி.,க்களைப் பெற்ற பா.ம.க., வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது. 1999-ல் தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் 5 எம்.பி.,க்களைப் பெற்ற பா.ம.க., மீண்டும் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது. 2004ல் தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணியில் புதுச்சேரி உட்பட 6 தொகுதிகளில் வென்ற பா.ம.க., மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றது. பா.ம.க., தலைவர் அன்புமணி சுகாதாரத் துறையின் கேபினட் அமைச்சராக இருந்தார். 2009 அ.தி.மு.க., கூட்டணியிலும், 2019ல் அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியிலும் போட்டியிட்ட பா.ம.க.,வுக்கு ஓரிடத்தில்கூட வெற்றி கிடைக்கவில்லை. இந்த முறை பா.ஜ., கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க.,வுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

ஜூன் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி