உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாம்பழ லோடு லாரிக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்கள் |lorry accident |8 workers died|andhra pradesh

மாம்பழ லோடு லாரிக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்கள் |lorry accident |8 workers died|andhra pradesh

ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம் ராஜம்பேட்டையில் இருந்து ரயில்வே கோடூர் சந்தைக்கு நேற்றிரவு லாரி ஒன்று மாம்பழங்களை ஏற்றி சென்றது. மாம்பழங்களை ஏற்றி இறக்கும் 18 கூலி தொழிலாளர்களும் லோடு மீது ஏற்றி அமர்ந்து சென்றனர். புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி ஏரி கரையில் சென்றபோது திடீரென சாலையை விட்டு விலகிய லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. லோடு மீது இருந்த கூலி தொழிலாளர்கள் கீழே சரிய அவர்கள் மீது மொத்த லோடுடன் லாரி சாய்ந்தது. இடிபாடுகளில் சிக்கி 8 தொழிலாளர்கள் அதே இடத்தில் இறந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ராஜம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இறந்தவர்கள் ரயில்வே கோடூர் மண்டலத்தில் உள்ள ஷெட்டிகுண்டா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.

ஜூலை 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை