உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கை குழந்தை காதில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி | Lovers escape | Youth intimidation | G

கை குழந்தை காதில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியதால் அதிர்ச்சி | Lovers escape | Youth intimidation | G

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது 23 வயது மகள் அனுசியா, சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பிடல் ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவரும், சிங்கப்பூரில் வேலை செய்யும் புதுக்கோட்டை கீரனூர் அடுத்த மாங்குடியை சேர்ந்த குமரேசனும் இன்ஸ்டாவில் பழகி காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஊருக்கு வந்த குமரேசன், அனுசியாவை சந்தித்துள்ளார். பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து சென்றபோது, குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பி உள்ளனர். பின்னர் குமரேசனும் - அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியில் சில நாட்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். திருச்சி சென்ற அனுசுயாவின் பெறறோர், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்து கண்டித்து, செல்போனையும் பிடுங்கினர். பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்திருக்கின்றனர். தான் அக்கா வீட்டில் இருப்பதை தனது காதலனுக்கு ரகசியமாக தகவல் அனுப்பி இருக்கிறார் அனுசுயா. இதனால் வாடகை காரில் நண்பர்களுடன் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு வந்திருக்கிறார் அவரது காதலன் குமரேசன். தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன், நண்பர்கள் 3 பேரை திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பையுடன் அனுப்பி அனுசுயாவை அழைத்து வர சொல்லி இருக்கிறார். தனது அக்கா மகள் மித்ராவுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுசியா, காதலனின் நண்பர்களை பார்த்ததும் அவர்களுடன் காரில் ஏறி தப்பிச் செல்ல முயன்றிருக்கிறார். இதை பார்த்த ஐஸ்வர்யா, கை குழந்தையுடன் சத்தம் போட்டு அவர்களை தடுக்க முயன்றார். அவரையும், தடுக்க வந்த ஊர் மக்களையும் அந்த நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அனுசுயாவை காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் பறந்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த கைகலப்பில் ஐஸ்வர்யா குழந்தையின் காதில் கத்தி பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்த ஐஸ்வர்யாவும், உறவினர்களும் அலறினர். உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து அனுசியாவின் உறவிர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், வழக்கு பதிந்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை