/ தினமலர் டிவி
/ பொது
/ வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத மக்கள் செய்த செயல் | LS Election 2024 | LS Election Phase 1
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத மக்கள் செய்த செயல் | LS Election 2024 | LS Election Phase 1
தமிழகத்தின் பல பூத்களில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லை. இந்த விவகாரம் இப்போது புயலை கிளப்பி இருக்கிறது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வரும் சென்னை நெற்குன்றத்தில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓட்டு இல்லை. வாக்குச்சாவடிக்கு வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த முறை இங்கே தானே ஓட்டு போட்டோம். இப்ப எங்க பெயர எங்கே என்று ஆதங்கத்துடன் கேட்டனர். ஓட்டே இல்லை. பிறகு எதற்கு எங்களுக்கு ஓட்டர் ஐடி என்று சொன்னபடி வாக்காளர் அடையாள அட்டைகளை தூக்கி வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.
ஏப் 19, 2024