வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உயர் பதவிகளை நிர்வகிப்பது 90 % உயர் சாதியினர். எப்படிஇவர்களை எதிர்த்து ஆட்சி செய்ய முடியும், தீர்ப்பு எழுத முடியும். இப்படி அடக்கு முறை தான் கோலோச்சி இருக்கும்
பேச்சுவார்த்தை தோல்வியால் தூய்மை பணியாளர்கள் கைது madurai corporation sanitary workers protest arre
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். 13 நாளாக போராடிய தூய்மைப் பணியாளர்களை கடந்த 13ம் தேதி நள்ளிரவில் போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். சென்னையை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் போராட துவங்கியுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 4 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இங்கு தூய்மை பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் இன்று காலவரையற்ற போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மாநகராட்சி சார்பில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்தது. மாலை 3-ம் கட்டமாக தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அதுவும் தோல்வியில் முடிந்தது. இரவு சூழ்ந்தும் தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தை தொடர்ந்தனர். 3-ம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால் மதுரை மாநகராட்சி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைதாக மறுத்தவர்களை தரதரவென இழுத்து சென்றும், குண்டு கட்டாக தூக்கி சென்றும் கைது செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உயர் பதவிகளை நிர்வகிப்பது 90 % உயர் சாதியினர். எப்படிஇவர்களை எதிர்த்து ஆட்சி செய்ய முடியும், தீர்ப்பு எழுத முடியும். இப்படி அடக்கு முறை தான் கோலோச்சி இருக்கும்