கல், கட்டையால் தாக்குதல்: மதுரை கிராமத்தில் பதற்றம் | Madurai
மதுரை, வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டுநீரேத்தான் கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கிராமத்தில் எருது கட்டு நடைபெறுவதால் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த ஊரில் உள்ள மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வடமாடு மஞ்சு விரட்டு நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் போட்டி நடக்கவில்லை. இதனால் மஞ்சுவிரட்டுக்கு ஏற்பாடு செய்தவர்கள் அவ்வப்போது கிராமத்தில் எதிர் தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை மேட்டுநீரேத்தான் கிராமத்தில் இரு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. கல் மற்றும் ஆயுதங்களால் ஒருவைர ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
செப் 01, 2024