/ தினமலர் டிவி
/ பொது
/ மகாராஷ்டிராவில் ஷிண்டே லூட்டி! என்ன காரணம் | Maharashtra | Devendra Fadnavis | Eknath Shinde
மகாராஷ்டிராவில் ஷிண்டே லூட்டி! என்ன காரணம் | Maharashtra | Devendra Fadnavis | Eknath Shinde
மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பாஜ, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த சூழலில் மஹாராஷ்டிர மாநில தலைமை செயலர் சுஜாதா சவுனிக் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அரசு சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏப் 04, 2025