உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிவசேனா சஞ்சய் ராவத் பேச்சுக்கு பாஜ கொடுத்த பதிலடி | Maharashtra Election 2024 | Election Result | S

சிவசேனா சஞ்சய் ராவத் பேச்சுக்கு பாஜ கொடுத்த பதிலடி | Maharashtra Election 2024 | Election Result | S

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகளை சிவசேனா உத்தவ் அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்தார். மகாராஷ்டிரா மக்களின் மனநிலையை இது பிரதிபலிக்கவில்லை. தேர்தலில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது. மகளிருக்கான நிதி உதவி திட்டத்தால் பாஜ கூட்டணிக்கு ஓட்டு கிடைத்தது என சொல்ல முடியாது. மற்றவர்களின் ஓட்டுகள் என்ன ஆனது? பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜ கூட்டணி அரசு மக்களுக்கு என்ன செய்தது? இந்த முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல. நாங்கள் ஏற்க மாட்டோம் என்றார். பைட் சஞ்சய் ராவத் சிவசேனா உத்தவ் பிரிவு https://twitter.com/ANI/status/1860188052943253649 அவரது பேச்சுக்கு பாஜ பதிலடி கொடுத்துள்ளது. பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனவல்லா கூறியதாவது: எப்போது எல்லாம் தேர்தலில் தோல்வியை சந்திக்கிறார்களோ, அப்போது எல்லாம் இப்படி தான் கூறுவார்கள். சஞ்சய் ராவத் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஜோக்கரைப் போல பேசி வருகிறார். வயநாடு, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில் மட்டும் இவிஎம் மெஷின்களில் எந்த கோளாறும் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நவ 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை