காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் 3ம்தேதி தேர்தல் கமிஷன் விசாரணை Maharashtra election result| Congress comp
மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு அன்று மாலை 5 மணி நிலவரப்படி 58 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டது. அன்று இரவு 11.30க்கு தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், 65 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. மறுநாள் மாலை 3 மணிக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்ட இறுதி அறிக்கையில், 66.05 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு, காங்கிரஸ், தேசியவாத காங் சரத் பவார் பிரிவு, சிவசேனா உத்தவ் பிரிவு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. மாலை 5 மணி நிலவரத்திற்கும் இரவு வெளியான நிலவரத்திற்கும் 8 சதவீத ஓட்டு வித்தியாசம் எப்படி வரும்? அதே போல், ஓட்டுப்பதிவு அன்று இரவு வெளியிட்ட அறிக்கைக்கும், மறுநாள் வெளியான அறிக்கைக்கும் 1 சதவீத ஓட்டு வித்தியாசம் வந்தது எப்படி? இதை வெறும் 1 சதவீத ஓட்டு என்று பார்ப்பதை விட, 9.99 லட்சம் ஓட்டு வித்தியாசம் எனக் கருத வேண்டும்.