உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தியை ஊக்கப்படுத்த மனமில்லையா? | Maize | Corn | Cess Tax | Farmers

உள்நாட்டு மக்காச்சோள உற்பத்தியை ஊக்கப்படுத்த மனமில்லையா? | Maize | Corn | Cess Tax | Farmers

வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தை அமைக்க முயற்சியா? தமிழக விவசாயிகள் வேதனை! தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது: தமிழக அரசு 40க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஒரு சதவீத செஸ் வரி வசூலிக்கிறது. இதில் மக்காச்சோளமும் அடங்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, நாகை மாவட்டங்களில் ஒரு சதவீத செஸ் வசூலிப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இப்போது கூடுதலாக 18 மாவட்டங்களில் உற்பத்தியாகி விற்கப்படும் மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் செஸ் நீக்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். விளை நிலங்களில் இருந்து வியாபாரிகளுக்கு நேரடியாக விற்கும் பொருட்களுக்கு செஸ் விவசாயிகளுக்கு எதிரானது. வியாபாரிகள், செஸ் உட்பட வண்டி வாடகை கழித்து பணத்தை கொடுப்பதால் விவசாயிகளின் வருமானம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. உள்நாட்டு மக்காச்சோளத்துக்கு செஸ் வரி விதித்து மரபணு மாற்றப்பட்ட வெளிநாட்டு மக்காச்சோளத்துக்கு சந்தையை உருவாக்கும் முயற்சியை எடுத்து வருவதாக சந்தேகம் எழுகிறது. வேளாண் விற்பனை வணிகத் துறையினரால், பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருட்களுக்கும், விவசாயிகள் - வியாபாரிகள் இடையே நேரடியாக நடக்கும் விற்பனைக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு செஸ் விதிப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

மார் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ