மக்காச்சோளம் தேக்கத்தால் 22 மாவட்ட விவசாயிகள் பாதிப்பு Maize one percent cess tax tamilnadu governm
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை சம்பந்தமாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேளாண் விற்பனை குழுக்கள் மூலமாக 40 க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்திப்பொருட்களுக்கு 1% செஸ் வரி ஏற்கனவே வசூலிக்கப்படுகிறது. மக்காச்சோளத்துக்கு ஏற்கனவே திருப்பூர், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் 1 % செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை உள்ளது. தற்போது நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர், விருதுநகர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மக்காச்சோளத்துக்கு 1 % செஸ் வரியை அரசு விதித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். குறிப்பாக, விற்பனைக்குழு வளாகத்துக்கு வெளியே விவசாயிகள் நேரடியாக விவசாய நிலத்திலிருந்து வியாபாரிகளுக்கு விற்பதற்கு வரி விதித்திருப்பது, வரி கட்டாமல் செல்லக்கூடிய வாகனங்களை பிடித்து அபராதம் விதிப்பது ஆகியவற்றால் கிராமத்துக்கு வியாபாரிகள் வராமல் 22 மாவட்ட மக்காச்சோளம் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.