சத்தீஸ்கர் காட்டில் நடந்த கடும் துப்பாக்கி சண்டை | 9 Naxals encounter | DRG | CRPF | Chhattisgarh
சத்தீஸ்கரின் தண்டேவாடா - பிஜப்பூர் மாவட்ட எல்லையில் 40க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் மாவட்ட, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். தண்டேவாடாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புரங்கல், அந்திரி காடுகளில் உள்ள லோஹா கிராமத்தில் நக்சலைட்டுகள் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச்சூடு முடிந்தபோது 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் மக்கள் விடுதலை கொரில்லா ராணுவ சீருடையில் இருந்ததாக பஸ்டர் மாவட்ட ஐஜி சுந்தர்ராஜ் கூறினார்.