உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஷூட்டிங்கில் நடந்தது என்ன? மலையாள நடிகை பகீர் Malayalam actress Sonia Malhar Me Too hero

ஷூட்டிங்கில் நடந்தது என்ன? மலையாள நடிகை பகீர் Malayalam actress Sonia Malhar Me Too hero

மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை அளித்த நாள் முதல் பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் கொடுமைகளை வெளியில் சொல்லி வருகின்றனர். நடிகர்கள் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா, டைரக்டர் ரஞ்சித் என பல விஐபிகள் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி, சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை வளையத்துக்குள் வந்து விழுந்துள்ளனர். லேட்டஸ்டாக மீ டூ புகாரை கூறியிருப்பவர் நடிகை சோனியா மல்ஹர். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள சோனியா மல்ஹர், கேரள சிறப்பு புலனாய்வுக்குழுவில் புகார் அளித்துள்ளார். தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி சோனியா மல்ஹர் விவரித்தார். 2013ல் தொடுபுழாவில் படப்பிடிப்பு நடந்தபோது எனக்கு அந்த ஹீரோ பாலியல் தொந்தரவு கொடுத்தார். நான் பிடித்து தள்ளி விட்டேன்; உடனே அவர் மன்னிப்பு கேட்டதால் விட்டேன் என சோனியா மல்ஹர் கூறினார். 10 ஆண்டுக்கு மேலாக மலையாள சினிமாவில் நடித்திருக்கிறேன். இதுபோல பலமுறை பாலியல் பிரச்னைகளை சந்தித்துள்ளேன் என சொல்லும் சோனியா மல்ஹர், சிலரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் எனவும் தெரிவித்தார்.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை