/ தினமலர் டிவி
/ பொது
/ மதிமுகவில் இருந்து பிரிந்த மல்லை சத்யா புதிய கட்சி துவங்குகிறார்! Mallai Sathya | MDMK | Vaiko | Dur
மதிமுகவில் இருந்து பிரிந்த மல்லை சத்யா புதிய கட்சி துவங்குகிறார்! Mallai Sathya | MDMK | Vaiko | Dur
ம.தி.மு.க. துணை பொதுச்செயலராக இருந்த மல்லை சத்யாவுக்கும், பொதுச்செயலர் வைகோ மற்றும் முதன்மை செயலர் துரைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக, மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக வைகோ நீக்கினார். தன் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த சத்யா, புதிய கட்சியை துவக்கும் அறிவிப்பை வெளியிட்டார். புதிய கட்சிக்கான கொடியில் கருப்பு, சிவப்பு நிறமும், ஏழு நட்சத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. ம.தி.மு.க.வில் இருந்து ஏற்கனவே விலகிய மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டது.
அக் 28, 2025