துரோகம் உண்மை என்றால் நீதி என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும் |mallai sathya|mdmk | vaikoparty issue
திமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுகவில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடனே இதுநாள் வரை இருந்து வந்துள்ளேன். ஆனால் கட்சியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை. அதற்கு நிச்சயமாக நான் காரணம் இல்லை. கடந்த 9ம் தேதி பேட்டியளித்த வைகோ, தமிழீழ தலைவர் பிரபாகரனுக்கு புலிப்படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததை போன்று எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்து விட்டார் என ஒப்பிட்டு பேசினார். சான்றோர் பெருமக்களே, நான் மாத்தையா போன்று துரோகியா நீதி சொல்லுங்கள். என் அரசியல் பொதுவாழ்க்கையில் வைகோவுக்கு எதிராக, நான் சிந்தித்தேன், செயல்பட்டேன் என்பது உண்மையானால், நீதி நின்று நிலைத்து என்னை இப்போதே சுட்டெரிக்கட்டும் இறந்து போயிருப்பேன். வைகோ தன் மகன் துரையின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படை தன்மையோடு, குடும்பத்தை மறந்து, வாழ்க்கையின் வசந்தத்தை தொலைத்த என் மீது அபாண்டமாக துரோகி என பழி சுமத்தி உள்ளார். அவர் பழி சுமத்திய 9ம் தேதியில் இருந்து இதுவரை 5 இரவுகளும் என்னால் தூங்க முடியவில்லை. என் தூக்கத்தை தொலைத்து விட்டேன்.