சித்தராமையாவை தொடர்ந்து நில முறைகேட்டில் கார்கே! | Mallikarjun Kharge | Aerospace park | Gaurav Bhat
டில்லியில் பேட்டி ஒன்றில் பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது: எங்கு சென்றாலும் ஊழல் செய்வோம் என்பது காங்கிரசின் புது முழக்கமாக மாறி உள்ளது. ஊழலுக்கு இணையாக காங்கிரஸ் மாறிவிட்டது என சொல்வதில் தவறு இல்லை. மூடா மற்றும் வால்மீகி அறக்கட்டளை ஊழல் கர்நாடகாவில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உடனே நாற்காலியை காலி செய்ய வேண்டும். இந்த விவகாரம் அடங்குவதற்குள் கார்கே குடும்பத்தினர் நடத்தும் அறக்கட்டளைக்கு பெங்களூரு அருகே உள்ள ஏரோஸ்பேஸ் பூங்காவில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. சித்தார்த் விகார் கல்வி அறக்கட்டளையை கார்கே, அவரது மனைவி, மருமகன் ராதாகிருஷ்ணா, மகன்கள் பிரியங்க் கார்கே மற்றும் ராகுல் கார்கே நடத்துகின்றனர். அந்த நிலத்தை கேட்டு பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்தும் அது ஏற்கப்படவில்லை. எந்த விதிகளையும் பின்பற்றாமல் கார்கே குடும்பத்தினரின் அறக்கட்டளைக்கு அந்த நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கார்கேவும், அமைச்சர் பதவியில் இருந்து அவரது மகன் பிரியன் கார்கேவும் பதவி விலக வேண்டும். அமைச்சர் பதவியில் நீடிக்க அவரது மகனுக்கு ஒரு நொடி கூட உரிமை இல்லை.