உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அந்த இடமே ரொம்ப டேஞ்சர்: குடும்பத்தை விழுங்கிய அலை | MamallapuramDrowning

அந்த இடமே ரொம்ப டேஞ்சர்: குடும்பத்தை விழுங்கிய அலை | MamallapuramDrowning

சென்னை அகரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 37. மகள்கள் கார்த்திகா வயது 17, துளசி, வயது16. இவர்கள் மூவர், வெங்கடேசனின் அக்கா ஹேமாவதி, உறவினர்கள் என 17 பேர் சுற்றுலா கிளம்பினர். மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு சென்றனர். அங்கு வெங்கடசேன் அவரது மகள்கள் உள்ளிட்ட 8 பேர் ஆபத்தான பகுதியில் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அது சேறு, பள்ளங்கள் நிறைந்த பகுதியாகும். அப்போது வந்த ராட்சச அலையில் வெங்கடசேன், அவரது மகள்கள் கார்த்திகா, துளசி, அக்கா ஹேமாவதி சிக்கினர். சேற்றில் கால் சிக்கி கொண்டதால் அவர்களால் வெளியேறவும் முடியவில்லை. நான்கு பேரையும் அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் ஹேமாவதியை மட்டும் மீனவர் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் வெங்கடசேன் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கீர்த்தனா, துளசி மாயமாகினர். இது மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது.

செப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி