25,000 ஆசிரியர்கள் நீக்கம்: பரபரப்பு தீர்ப்பால் மம்தா அதிர்ச்சி Mamata Banerjee West Bengal Suprem
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 25,753 ஆசிரியர்கள் 2016ம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். அவர்களை நியமிப்பதற்காக பள்ளி ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி அபிஜித் கங்குலி Abhijit Ganguly 2021ல் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க துவங்கியது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத் துறையும் களமிறங்கியது. மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்ட திரிணமுல் தலைவர்கள் மற்றும் கல்வித்துறை முன்னாள் அதிகாரிகள் பலர் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதா பானர்ஜியின் வீடுகளில் 2022ம் ஆண்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, 50 கோடி ரூபாய் பணம், 10 கிலோ தங்கம் ஆகியவற்றை கைப்பற்றியது மேற்கு வங்க அரசியலையே உலுக்கியது.