உபி மக்களை கதிகலங்க செய்யும் ஓநாய்கள் Man-eater Wolf| Wolf at Uttarpradesh| Bahiraich|
கூண்டில் சிக்கியது 5வது ஓநாய் மனிதர்களை பழிவாங்க வந்ததா? உத்தர பிரேதசத்தின் லக்னோவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ளது பஹ்ராய்ச். இங்குள்ள சில கிராமங்களில் ஓநாய்களின் நடமாட்டம் அதிகரித்தது. இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்த ஓநாய்கள் ஒரு பெண் 9 குழந்தைகள் என 10 பேரை வேட்டையாடி கொன்றன. ஓநாய்கள் தாக்குதலுக்கு ஆளாகி 36 பேர் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தனர். மொத்தம் 6 ஓநாய்கள் சுற்றித்திரிந்த நிலையில், 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டன. மீதமுள்ள 2 ஓநாய்கள் வனத்துறையினருக்கு போக்குக் காட்டி வந்தன. கேமராக்கள் பெருத்தியும், ட்ரோன்கள் மூலமும் ஓநாய்கள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து, 5வது ஓநாயை பிடித்துள்ளனர். இது, முன்பு பிடிபட்ட ஓநாய்களை விட ஆக்ரோஷமாக இருப்பதாக வனத்துறையினர் கூறினர். 6வது ஓநாயை பிடிக்க முயற்சிகள் தொடர்கின்றன. அது பிடிபடும் வரை தங்களால் நிம்மதியாக துாங்க முடியாது என பஹ்ராய்ச் வாசிகள் கூறினர். அவர்களும் தங்கள் பங்குக்கு கம்பு, ஆயுதங்கள், தீவட்டியுடன் இரவில் ஊருக்குள் கூட்டம் கூட்டமாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.