/ தினமலர் டிவி
/ பொது
/ அதள பாதாளத்தில் மருத்துவத்துறை! இபிஎஸ் கண்டனம் | Manamadurai Government Hospital |Viral Vide |EPS
அதள பாதாளத்தில் மருத்துவத்துறை! இபிஎஸ் கண்டனம் | Manamadurai Government Hospital |Viral Vide |EPS
சிவகங்கை மானாமதுரை அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இரவு கீழப்பசலையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டு சிகிச்சைக்கு வந்தார். அப்போது மின்சாரம் இல்லாததால் மொபைல் போன் லைட் வெளிச்சத்தில் ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். 12க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் மூன்று பேர் மட்டுமே உள்ளனர்.
டிச 05, 2024