மணிப்பூர் அரசுக்கு எதிராக திரண்ட மாணவர்கள் Manipur Violence | Imphal Violence | Meitei - Kuki
மணிப்பூரை உலுக்கும் கலவரம் இன்டர்நெட் சேவை முடக்கம் டிஸ்க்: மணிப்பூரில் கடந்த ஆண்டு இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்தனர். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் அவ்வப்போது சிறு சிறு அளவில் மோதல் சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. ஒரு சமூத்தை சேர்ந்த போராளிகள், மற்றொரு சமூகத்தினர் வாழும் பகுதிகளில் டிரோன்களில் வெடிகுண்டுகளை கட்டி வீசியதால் பதட்டம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சமூகத்தினர் போராட்ட களத்தில் குதித்தனர். இரு சமூகத்தினரும் மீண்டும் மோதிக்கொண்டதால் கலவரம் பெரிதானது. போலீசார், துணை ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் கலவரக்காரர்களை விரட்டி அடித்தனர். போராட்டத்தில் குதித்த மாணவர்கள், மணிப்பூர் கவர்னர், முதல்வர் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர். போராட்டம் குறித்த தகவல், வதந்திகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியதால் நிலைமை மோசமாகி உள்ளது.