உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மணிப்பூர் அரசியலில் நடந்தது என்ன? JD(U) withdraws support for BJP led Government | Manipur Politics|

மணிப்பூர் அரசியலில் நடந்தது என்ன? JD(U) withdraws support for BJP led Government | Manipur Politics|

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், பாஜ தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மொத்தம் 60 சட்டசபை தொகுதிகளை கொண்ட அந்த மாநிலத்தில், பாஜவுக்கு 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். நாகா மக்கள் முன்னணியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேர் பாஜ தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 2022 தேர்தலில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர்கள் 6 பேர் வெற்றி பெற்றனர். சில நாட்களில், 5 பேர் பாஜவுக்கு தாவினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அப்துல் நசிரீன் மட்டும் ஜேடியு எம்எல்ஏவாக உள்ளார். மத்திய அரசு மற்றும் பீகார் மாநில அரசில் பாஜ, ஜேடியு கூட்டணி நீடிக்கிறது. இச்சூழலில், ஜேடியுவின் மணிப்பூர் மாநில தலைவர் Kshetrimayum Biren Singh க்ஷேத்ரிமயூம் பிரேன் சிங், கவர்னர் அஜய் குமார் பல்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மணிப்பூரில் பாஜ தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஜேடியு திரும்ப பெறுகிறது. எனவே எம்எல்ஏ அப்துல் நசிரீன் இனி எதிர்க்கட்சி எம்எல்ஏவாக கருதப்படுவார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஜன 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை