வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காரணம் ஏதும் இல்லாமல் கொள்முதல் செய்யாதற்கு அரசே பொறுப்பேற்று அந்த நெல்லுக்கு முழு ஆதார விலையையும் கொடுக்கவேண்டும் .
எல்லாமே போச்சே: கையில் நெற்பயிருடன் கதறி அழும் மூதாட்டி | Mannargudi | crop damage
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு கொண்டு வரப்பட்ட நெல் முட்டைகளை வாங்க அதிகாரிகள் அலட்சியம் காட்டினர். ஒரு வாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட லாரியிலேயே அவை இருந்தன. சமீபத்தில் பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து முளைக்க தொடங்கின. அரசை நம்பி அனுப்பி வைத்த நெல் சேதமானதை கண்டு விவசாயிகள் வேதனை அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும் கனமழையால் பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. அவை மண்ணில் புதைந்து முளைக்க தொடங்கின. கண் முன்னே பயிர் நாசமானதை கண்டு மூதாட்டி கதறி அழுதார். #MannargudiFlood #KuruvaiCropDamage #TamilNaduFarmers #PaddyHarvestLoss #RainReliefDemand #CauveryDeltaCrisis #FarmerProtest #TNMonsoonWoes
காரணம் ஏதும் இல்லாமல் கொள்முதல் செய்யாதற்கு அரசே பொறுப்பேற்று அந்த நெல்லுக்கு முழு ஆதார விலையையும் கொடுக்கவேண்டும் .