உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அருப்புக்கோட்டையில் போலீசார் தீவிர விசாரணை! Masked Mans | 4 Bikes theft | Aruppukottai

அருப்புக்கோட்டையில் போலீசார் தீவிர விசாரணை! Masked Mans | 4 Bikes theft | Aruppukottai

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் அன்பழகன். தனது டுவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு இரவு தூங்க சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது டுவீலரை காணவில்லை. இதே போன்று இவர் வீட்டின் அருகிலேயே மாரிச்செல்வம், கவியரசு உள்ளிட்ட 3 பேரின் பைக்குகளும் திருடு போயிருந்தது. இரவில் மங்கி குல்லா அணிந்த மர்மநபர்கள் நடமாட்டம் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் எதுவும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என க்ரைம் போலீசார் பார்த்து வருகின்றனர். ஒரே ஏரியாவில் 4 பைக்குகள் காணாமல் போன சம்பவம் அருப்புகோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை