உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வரவழைக்க இப்படியும் ஐடியா Massage Chairs and Sofa for Karnataka MLA| Reclin

எம்எல்ஏக்களை சட்டசபைக்கு வரவழைக்க இப்படியும் ஐடியா Massage Chairs and Sofa for Karnataka MLA| Reclin

கர்நாடக சட்டசபையில் எம்எல்ஏக்கள் வருகை பதிவை அதிகரிக்கவும், சட்டசபை கூட்டத்தில் எம்எல்ஏக்கள் நீண்ட நேரம் பங்கேற்கவும் சபாநாயகர் காதர் புதிய முயற்சியில் களம் இறங்கியுள்ளார். சட்டசபை வளாகத்தில் எம்எல்ஏக்கள் ஓய்வெடுக்கும் அறையில் 15 சொகுசு சோபாக்கள் மற்றும் மசாஜ் செய்யும் நவீன சாய்தள நாற்காலியும் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சபாநாயகரின் உத்தரவுப் படி சோபாக்கள் மற்றும் மசாஜ் நாற்காலிகள் சட்டசபையில் நிறுவப்பட்டன. எம்எல்ஏக்கள் நீண்ட நேர விவாதங்களில் பங்கேற்கும் போது அவர்களுக்கு ஏற்படும் உடல் அசதியை போக்கிக் கொள்ளவும், வசதியாக ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் கூட்டத்தில் பங்கேற்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியான பாஜ விமர்சித்துள்ளது. எம்எல்ஏக்களின் சொகுசு வசதிக்காக மக்கள் வரிப்பணம் வீணடிப்பதா எனவும் பாஜ கேள்வி எழுப்பியுள்ளது. இந்த சோபாக்கள் வாடகைக்குத் தான் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எம்எல்ஏக்கள் சட்டசபை விவாதங்களில் பங்கேற்கும் நேரம் அதிகரிக்கும் என சபாநாயகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி