உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மயிலாடுதுறை சம்பவத்தில் பகீர் கிளப்பும் உண்மை பின்னணி | Mayiladuthurai case | Annamalai | DMK vs BJP

மயிலாடுதுறை சம்பவத்தில் பகீர் கிளப்பும் உண்மை பின்னணி | Mayiladuthurai case | Annamalai | DMK vs BJP

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் என்ற கிராமத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பவர்கள் பற்றி போலீசுக்கு தகவல் சொன்ன 2 இளைஞர்களை, ஒரு கும்பல் குத்தி கொலை செய்ததாக வெளியான தகவல் தமிழகத்தை உலுக்கிப்போட்டுள்ளது. கொலையாளிகளின் வீடுகளை ஊர் மக்கள் சூறையாடி விட்டனர். முட்டம் கிராமமே பதற்றத்தில் மூழ்கி விட்டது. உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் வயது 28. இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் ஹரீஷ் வயது 25, அஜய் வயது 19, பக்கத்து கிராமமான சீனிவாசபுரத்தை சேர்ந்த சக்தி வயது 20 ஆகியோருடன் முட்டம் வடக்கு தெரு முக்கு பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அதே வடக்கு தெருவில் வசிக்கும் ராஜ்குமார், தங்கத்துரை, மூவேந்தன் ஆகியோர் அங்கு வந்தனர். இளைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தினர். ஹரீஸ், அஜய், சக்தி ஆகியோருக்கு கத்திக்குத்து விழுந்தது. பயத்தில் தினேஷ் கூச்சலிட்டார். உடனே ஊர் மக்கள் ஓடி வந்தனர்.

பிப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ