வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேர்மையாக நடந்தாலும், மதுவை விற்றே தீரணும் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக நடந்தாலும் எங்களின் மாடல் ஆட்சியில் இதுதான் தண்டனை.
மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் | sundaresan | mayiladuthurai dsp suspen
இவரது அலுவலக வாகனத்தை பறித்து விட்டதால் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றதாக வீடியோ ஒன்று மீடியாவில் வைரலானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த மாவட்ட எஸ்பி ஸ்டாலின், டி.எஸ்.பி. சுந்தரேசனிடம் அலுவல் பணி காரணமாக பெறப்பட்ட வாகனத்தை திரும்ப ஒப்படைத்து விட்டதாக தெரிவித்திருந்தார். ஆனால் இந்த சம்பவத்தில் பின்னணியில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி.செந்தில்வேலன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இருப்பதாக டிஎஸ்பி சுந்தரேசன் குற்றம் சாட்டினார். காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அழுத்தம் தருவதாகவும் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். அவை அனைத்தையும் எஸ்பி ஸ்டாலின் மறுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சை மண்டல ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார், டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆபீசில் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் டி.எஸ்.பி. சுந்தரேசனை சஸ்பெண்டு செய்ய திருச்சி சரக ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தனர். இதுதொடர்பாக சுந்தரேசனிடம் கேட்டபோது, காலை டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டி அளித்த நிலையில், மாலை அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி பேட்டி அளித்ததாக சுந்தரேசன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன உயர் அதிகாரி அனுமதியின்றி பேட்டி அளித்ததுடன், உயர் போலீஸ் அதிகாரிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியது, தனக்கு வாகனம் அளிக்காமல் அநீதி இழைத்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமியை அச்சுறுத்தி, அவரை தற்கொலை முயற்சிக்கு தூண்டியது, ஏசி, பிரின்டர் வசதி செய்யும்படி எஸ்ஐ முருகவேலிடம் அதிகாரம் செலுத்தியது, முறையான குறை தீர்ப்பு வழிமுறைகளை பின்பற்றி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்காதது, உயர் அதிகாரியான மாவட்ட எஸ்பியின் அதிகாரத்தை கேள்வி கேட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும் டிஎஸ்பி சுந்தரேசன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நேர்மையாக நடந்தாலும், மதுவை விற்றே தீரணும் என்ற அரசின் கொள்கைக்கு எதிராக நடந்தாலும் எங்களின் மாடல் ஆட்சியில் இதுதான் தண்டனை.