நிலத்தை ஆக்ரமித்ததால் ஆட்டோ டிரைவர் ஆத்திரம்
தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாநகராட்சி மேயர் நீதுகிரண். BRS கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் சேகர். இவர், சாயந்திர நகரில் சாலையோரத்தில் நின்று நண்பர்களுடன் நேற்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஷேக் ரசூல், திடீரென சேகர் மீது பாய்ந்து தக்கினார். தமது ஆட்டோவில் இருந்து பெரிய சுத்தியலை எடுத்து வந்து தாக்கினார். இதில், சேகரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். ஆட்டோ டிரைவர் ரசூல் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். காயமடைந்த சேகரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர். சேகரை தாக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்ட ஆட்டோ டிரைவர் ரசூல், எதற்காக தாக்கினார் என்ற காரணத்தையும் அதில் சொல்லி இருந்தார். மேயரின் கணவர் சேகரும் அவரது நண்பர் கோபாலும், தமது நிலத்தை ஆக்ரமித்து கொண்டதாகவும், இடத்தை தரவேண்டுமானால் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் ரசூல் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரான என்னால் எவ்வளவு பணம் கொடுக்க முடியாது அதனால்தான் அவரை தாக்கினேன் என ரசூல் கூறியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான ஷேக் ரசூலை தேடி வருகின்றனர்.