பசுமை தீர்ப்பாய உத்தரவை அடுத்து கேரள அரசு நடவடிக்கை! Bio-Medical Wastes | TN Border areas | Kerala
கொட்டிய மருத்துவ கழிவுகளை எடுத்து செல்கிறது கேரளா! கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்றுநோய் மையத்தின் மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நடுகல்லூர், கோடகநல்லூர், சுத்தமல்லி பகுதியில் சில வாரங்களுக்கு முன் கொட்டப்பட்டன. இதனால் நோய் பரவும் ஆபத்து இருப்பதை புரிந்து கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை 3 தினங்களுக்குள் கேரள அரசு அப்புறப்படுத்த வேண்டுமென தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த பிறகு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், கேரள அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடிதம் எழுதியது. தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டது.