மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் பெரும் பதற்றம் | Mettupalayam Municipality | AIADMK
எப்போதும் இல்லாத கடும் அமளி பெண் தலைவர் மீது டம்ளர் வீச்சு கமிஷனர் அமுதா ஷாக் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது பர்வீன் திமுகவைச் சேர்ந்தவர். பல பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை; குடிநீரும் முறையாக வருவதில்லை என அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். ஒரு அதிகாரி வீட்டுக்கு செல்ல வசதியாக, நீர்வழி பாதையை ஆக்கிரமித்து நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துள்ளதாக திமுக கவுன்சிலர் நவீன் குற்றம்சாட்டினார். அதற்கு அந்த பெண் அதிகாரி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது, அதிமுக கவுன்சிலர்கள் ஆவேசமானார்கள். உங்க தனிப்பட்ட சண்டையை கூட்டத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்; மக்கள் பிரச்னையை பற்றி பேசுங்கள் என சத்தம் போட்டனர். அப்போது ஒரு கவுன்சிலர் கடும் கோபமாகி, டம்ளர்களை எடுத்து நகராட்சி தலைவரை நோக்கி வீசினார். ஆனால், பர்வீன் மீது டம்ளர்கள் படவில்லை.