உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு | Microsoft | Intel| Conginizent

இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு | Microsoft | Intel| Conginizent

சர்வதேச அளவில் முன்னணி வகிக்கும் ஐடி நிறுவனங்களின் தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். ஏஐ எனப்படும் ஆர்டிபீசியல் இன்டலிஜென்ட்ஸ் துறை, செமி கண்டக்டர் உற்பத்தி, ஐடி துறை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமருடன் ஆலோசித்தனர். அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார். இந்த தொகை ஏஐ தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். ஆசியாவில், மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் மிகப் பெரிய முதலீடாக அமையும் எனவும் நாதெல்லா கூறினார்.

டிச 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை