உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிளகாய் பொடி வெங்கடேசனை பாஜ தூக்கியடித்த பரபரப்பு பின்னணி | milagaipodi venkatesan | bjp vs dmk

மிளகாய் பொடி வெங்கடேசனை பாஜ தூக்கியடித்த பரபரப்பு பின்னணி | milagaipodi venkatesan | bjp vs dmk

சென்னை பாடியநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன். பிரபல ரவுடியாக வலம் வந்தவர். இவர் பாஜவில் சேர்ந்தார். அவருக்கு தமிழக பாஜவின் ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில் மதுரையில் நடந்த பாஜ மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அமித்ஷாவை வரவேற்க பாஜ அமைத்த குழுவில் மிளகாய் பொடி வெங்கடேசனும் இருந்தார். அமித்ஷாவை அவர் வரவேற்கும் போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரவுடியை பாஜ கட்சியில் சேர்த்து இருப்பதாகவும், மத்திய அமைச்சரையே அவர் வரவேற்று இருப்பதாகவும் திமுக குற்றம் சாட்டியது. இதற்கிடையே அமித்ஷாவை வரவேற்கும் போட்டோவை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்ட மிளகாய் பொடி வெங்கடேசன், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநில போலீசாரையும் டேக் செய்திருந்தார். இந்த நிலையில் மிளகாய் பொடி வெங்கடேசனை திடீரென செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். மிரட்டி பணம் பறித்ததாக அவர் மீது 2 தொழில் அதிபர்கள் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மிளகாய் பொடி வெங்கடேசனை கட்சியில் இருந்து நீக்கி பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சிக்கு களங்கம் விளைவிக்கம் வகையில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் ஒபிசி பிரிவின் செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் வெங்கடேசனை நீக்குவதாக அறிவித்தார். அவருடன் கட்சியினர் யாரும் எந்தவித தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். இந்த நிலையில் மிளகாய் பொடி வெங்கடேசன் பற்றி திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஜூன் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ