உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் ஒன்று சொன்னால் கலெக்டர் அதை மறுக்கிறார் Minister Ragupathi | high court Madurai

அமைச்சர் ஒன்று சொன்னால் கலெக்டர் அதை மறுக்கிறார் Minister Ragupathi | high court Madurai

திருப்பரங்குன்றம் மலை தீப துாணில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என, தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட் கிளையில் நடந்து வருகிறது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அமைச்சர் ரகுபதி தீபம் ஏற்றுவதற்கு எதிராக கருத்து தெரிவித்ததைக் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரமசிவம் இடையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம் தெரிவித்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில் அவர் கூறியதாவது ஜனவரி 7ம்தேதி தினமலர் நாளிதழில் அமைச்சர் ரகுபதியின் கருத்து ஒன்று வெளியானது. அதில், “ஐகோர்ட் உத்தரவுப்படி துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்கத்தான் தடை உத்தரவு போடப்பட்டது. அப்படி செய்திருக்காவிட்டால், அங்கு தீபம் ஏற்றியிருப்பார்கள். அப்படி நடந்திருந்தால், தீபம் ஏற்றுவது வழக்கமாகி விடும். ஒரு இடத்தில் இது தான் நடக்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் அது தான் நடக்க வேண்டும். கிராமத்தில் சுடுகாடு இருக்கும் இடத்தில் தான் பிணத்தை எரிப்பார்கள். வேறு எந்த இடத்திலும் பிணத்தை எரிக்க மாட்டார்கள். அதுபோல், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும். புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதை அனுமதிக்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறி உள்ளார். ஆனால் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் பத்திரிகை செய்திகளை கவனத்தில் கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மார் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை