சுடுறவன் மதம் பத்தியா கேட்பான்? அமைச்சர் பேச்சுக்கு கண்டனம்
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. பதிலுக்கு பாகிஸ்தான் தங்கள் நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதித்தது. இரு நாடுகள் இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், கர்நாடக முதல்வர் சித்தராமையா, போரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அமைதி நில வேண்டும். மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக்கூறினார்.
ஏப் 27, 2025