உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மீஞ்சூரில் அடுத்தடுத்து தண்டவாளத்தில் பிரச்னைகள் Minjur railway station signal problem cracks in tr

மீஞ்சூரில் அடுத்தடுத்து தண்டவாளத்தில் பிரச்னைகள் Minjur railway station signal problem cracks in tr

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மார்க்கத்தில் பல ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். இன்று காலை மீஞ்சூர் அனுப்பம்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை பார்த்த ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் சென்னை செல்லும் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை செல்லக்கூடிய தாதாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், செகந்திராபாத் எக்ஸ்பிரஸ், 3 மின்சார ரயில்கள் என 5 ரயில்கள் பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ரயில் நிலைங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டன. ரயில்வே ஊழியர்கள் வந்து, தண்டவாளத்தில் விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்தில் விரிசல் சரி செய்யப்பட்டு ரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக இயக்கப்பட்டன. சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் வேலைக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி