48 சுரங்கங்கள், 143 பாலங்களுடன் சவாலான வழிதடத்தில் ரயில்பாதை Mizoram Railway Project|Aizawl Rail
நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் ரயில் பாதை பணிகள் முடிந்ததால், நாட்டின் பிற பகுதிகளுடன் மிசோரமும் ரயில் வழித்தடத்தில் இணைய உள்ளது. மிசோரம் மாநிலத்தை ரயில்வேயுடன் இணைப்பதற்கான முயற்சி, 1999ல் துவங்கியது. இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, திட்டத்தை செயல்படுத்துவது என, 2003ல் முடிவு செய்யப்பட்டது. 2008ல் இந்த திட்டம் தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. 20014ல் இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நிலம் கையகப்படுத்தப்பட்டு, பணிகள் துவங்கி 11 ஆண்டுகளுக்கு பின் தற்போது மிசோரமில் ரயில்வே பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 51.38 கிமீ நீளத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 48 சுரங்கங்கள், 55 சிறிய பாலங்கள், 88 பெரிய பாலங்கள், 5 சாலை மேம்பாலங்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், குதுப்மினாரை விட உயரமாக 104 மீட்டர் உயரத்தில் ஒரு பாலம் அமைந்துள்ளது. ரயில் சோதனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில், விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கும்.