100 நாள் வேலை: ஸ்டாலின் அடுக்கும் குற்றச்சாட்டு | MK Stalin | MGNREGA
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைக்கான சம்பள தொகையை மத்திய அரசு வழங்கும். தமிழகத்துக்கு கடந்த ஐந்து மாதங்களில் தர வேண்டிய 4,034 கோடி ரூபாயை மத்திய அரசு நிலுவை வைத்துள்ளது என திமுக எம்பி கனிமொழி பார்லிமென்டில் கூறி இருந்தார். மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி கனிமொழி கேள்விகளுக்கு பதில் சொன்னார். வேலை செய்தவர்களுக்கு, 15 நாட்களுக்குள் பணம் தரப்படும். அதற்கு மேலானால், அதற்கு வட்டி தரப்படும். காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
மார் 29, 2025