உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்புரவு பணியாளர் மாண்பை அரசு விட்டுத்தராது: ஸ்டாலின் mk stalin| thangam thennarasu| SanitaryWorker

துப்புரவு பணியாளர் மாண்பை அரசு விட்டுத்தராது: ஸ்டாலின் mk stalin| thangam thennarasu| SanitaryWorker

ென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரிப்பன் மாளிகை முன் தூய்மை பணியாளர்கள் 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். நடைபாதை, சாலையை ஆக்ரமித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனக்கூறிய ஐகோர்ட், அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. பேச்சவார்த்தையிலும் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில், நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று uகது செய்தனர். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அரசு என்றும் தூய்மை பணியாளர்கள் பக்கம் நிற்கும் என தெரிவித்து உள்ளார். நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்த நேரத்திலும் ஓயாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் மாண்பை அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என ஸ்டாலின் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து காலை உணவு, உயர்கல்வி ஊக்கத்தொகை, சுயதொழில் உதவி உள்ளிட்ட பல புதிய நலத்திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தூய்மை பணியாளர்களுக்காக அரசு செயல்படுத்த உள்ள புதிய 6 திட்டங்கள் பற்றிய விவரங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

ஆக 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை