உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடி கும்பிட்ட லிங்கத்துக்கு இவ்ளோ பெருமையா-பரபர தகவல் | modi gangaikonda cholapuram temple

மோடி கும்பிட்ட லிங்கத்துக்கு இவ்ளோ பெருமையா-பரபர தகவல் | modi gangaikonda cholapuram temple

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி 1000 ஆண்டுக்கு முன்பு மன்னன் ராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிட்டார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த மோடிக்கு, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கோயிலின் மூலவரான பிரகதீஸ்வரர் பிரமாண்ட சிவ லிங்கமாக காட்சி அளிக்கிறார். சிவ லிங்கம் முன்பு பிரதமர் மோடி மனம் உருகி சாமி கும்பிட்டார். லிங்கத்துக்கு தீபாராதனை காட்டினார். தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே இந்த சிவலிங்கம் தனித்துவமானது. இதன் உயரம் 13 அடி. சுற்றளவு 60 அடி. இது தான் தமிழக சிவன் கோயில்களில் இருக்கும் பெரிய லிங்கம் என்கின்றனர். இந்த லிங்கம் முழுக்க முழுக்க ஒரே கல்லில் செதுக்கப்பட்டது இதன் தனிசிறப்பாகும். கங்கையில் இருந்து தான் எடுத்து வந்த புனித நீரையும் வழங்கி மோடி வழிபாடு செய்தார். பின்னர் துர்கை சன்னதி, பார்வதி, முருகர் சன்னதிகளிலும் மோடி சாமி கும்பிட்டார்.

ஜூலை 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை