மோடி வந்ததும் அதிமுக-பாஜவில் அடுத்த மேஜிக் Modi-Palaniswamy meet | admk bjp | pampan bridge | modi
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் மோடியை பார்க்க தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் இன்னும் பரபரப்பை எகிற வைத்துள்ளது. எலியும் பூனையுமாக சண்டையிட்டு வந்த அதிமுக, பாஜ, சில நாட்களுக்கு முன்பு திடீரென கூட்டணி பேச்சை ஆரம்பித்தது தமிழக அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியது. சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாக டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார் பழனிசாமி. தமிழக நலனுக்கான கோரிக்கைகளை வைத்தேன். கூட்டணி பற்றி எல்லாம் பேசவில்லை என்று அடித்து சொன்னார். ஆனால் யாரும் நம்பவில்லை. அவர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி பற்றி பேசிய விவகாரம் வெளியே கசிந்துவிட்டது. இதை அமித்ஷாவும் உறுதி செய்தார். பழனிசாமியுடன் சந்திப்பு நடந்த அதே நாளில், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி 2026ல் ஆட்சி அமைக்கும் என்று தனது சோசியல் மீடியாவில் எழுதினார்.