மோடியை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த புடின் Modi-Putin meet | Putin joke | Modi laugh viral video
ரஷ்யா-இந்தியா உறவை மேம்படுத்த புடினுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். மோடியுடன் இதற்கு முன்பு நடந்த சந்திப்புகளை புடின் நினைவு கூர்ந்தார். நாங்கள் ஜூலை மாதம் நேரில் சந்தித்தோம். முக்கியமான பல விவகாரங்கள் பற்றி நல்ல முறையில் விவாதித்தோம். அதன் பிறகு போனிலும் பல முறை பேசி இருக்கிறோம். எங்கள் அழைப்பை ஏற்று மோடி ரஷ்யா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று புடின் சொன்னார். புடின் ரஷ்யன் மொழியில் பேசினார். அதை டிரான்ஸ்லேட்டர் இந்தியில் மொழிபெயர்த்தார். அப்போது குறுக்கிட்ட புடின், எங்க 2 பேருக்கும் நடுவுல அவ்ளோ உன்னதமான நட்பு இருக்கு. இதெல்லாம் நீங்க மோடியிடம் டிரான்ஸ்லேட் பண்ண வேண்டிய தேவையே இருக்காதுனு நினைக்கேன் என்று கலகலவென சிரித்தார். புடின் அடித்த கமென்ட்டை டிரான்ஸ்லேட்டர் மொழிபெயர்த்தார். அதை கேட்டதும், மோடியும் குலுங்கி குலுங்கி சிரித்தார்.