உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாடு திரும்பிய மோடி டில்லி ஏர்போர்ட்டில் செய்த சம்பவம் Modi on Kashmir attack| Modi Stops SPG to

நாடு திரும்பிய மோடி டில்லி ஏர்போர்ட்டில் செய்த சம்பவம் Modi on Kashmir attack| Modi Stops SPG to

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த செய்தியை கேட்டதும் அரசு முறை பயணமாக சவுதி சென்றிருந்த மோடி, பயணத்தை பாதியிலேயே முடித்து உடனடியாக நாடு திரும்பினார். முன்னதாக சவுதியில் இருந்தபடியே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் போனில் பேசினார். காஷ்மீர் சம்பவம் குறித்து கேட்டறிந்த அவர், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். மோடியின் உத்தரவுப்படி அமித் ஷா உடனடியாக காஷ்மீர் விரைந்தார். இன்று காலை மோடியின் விமானம் டில்லி ஏர்போர்ட் வந்திறங்கியது. வழக்கம் போல் மோடியின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் பிரதமருக்கான பிரத்யேக காருடன் ஏர்போர்ட்டில் தயாராக இருந்தனர். மோடி விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும், அவரது எஸ்பிஜி காரின் கதவை மோடிக்காக திறக்க முயன்றார். சட்டென அவருக்கு கைகாட்டி நிறுத்திய மோடி, அங்கிருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஏர்போர்ட்டில் உள்ள அறைக்கு சென்றார். சவுதியில் இருந்து நாடு திரும்பிய மோடி, வழக்கம் போல் பிரதமர் இல்லத்திற்கோ அல்லது நேராக அலுவலகம் சென்றோ பணிகளை கவனிப்பார் என எதிர்பார்த்து, அவரது எஸ்பிஜி காரை தயார் நிலையில் வைத்திருந்ததுடன், கதவையும் திறக்க முயன்றார். அப்போது கூரிய பார்வையுடன் காரை திறக்காதே என பார்வையிலேயே உத்தரவிட்ட மோடி, ஏர்போர்ட்டிலேயே அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் காஷ்மீர் தாக்குதல் குறித்து ஆலோசித்தார். எப்போதும் மோடியுடனே இருக்கும் எஸ்பிஜிக்கே அவரது திட்டம் புரியாமல் போனதும், காஷ்மீர் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மோடி காட்டிய முனைப்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ