/ தினமலர் டிவி
/ பொது
/ உலகின் உயரமான ரயில் பாலம் கட்டியவர்களுக்கு மோடி இன்ப அதிர்ச்சி Modi with Chenab Constructors
உலகின் உயரமான ரயில் பாலம் கட்டியவர்களுக்கு மோடி இன்ப அதிர்ச்சி Modi with Chenab Constructors
ஜம்மு - காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். கொராேனா தொற்று அச்சுறுத்தல், இயற்கை பேரிடர்கள், மோசமான வானிலை, மலையில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் ஆகியவற்றை கடந்து, இந்த பாலத்தை கட்டி முடித்து நம் பொறியாளர்கள், தொழிலாளர்கள் சாதனை படைத்துள்ளனர். உலக நாடுகள் திரும்பி பார்த்து அதிசயிக்கும் பாலத்தை கட்டியவர்களை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டி, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பொறியாளர்கள், தொழிலாளர்களை சந்தித்த மோடி, அவர்கள் எந்தெந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என விசாரித்தார். பீகார், ஆந்திரா, கேரளா என ஒவ்வொருவரும் அவர்களது மாநில பெயரை கூறினர்.
ஜூன் 06, 2025