உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆயுஷ்மான் திட்ட விழாவில் AAP, TMC அரசு மீது தாக்கு

ஆயுஷ்மான் திட்ட விழாவில் AAP, TMC அரசு மீது தாக்கு

டெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் 12,850 கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார துறை தொடர்பான பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 70வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் வகையில் விரிவாக்கப்பட்ட ஆயுஷ்மான் திட்டதையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரையும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டு வருவேன் என்று லோக்சபா தேர்தலின்போது உறுதி அளித்திருந்தேன். தன்வந்திரி ஜெயந்தி நாளில் அந்த உத்தரவாதம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !