உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இப்போ மட்டும் இலவசங்கள் நல்லதா?: மோடிக்கு கெஜ்ரி கேள்வி

இப்போ மட்டும் இலவசங்கள் நல்லதா?: மோடிக்கு கெஜ்ரி கேள்வி

டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரசும் தனியாக களம் இறங்கி இருக்கிறது. ஆட்சியை பிடித்து விடும் எண்ணத்தில் கவர்ச்சிகர இலவச வாக்குறுதிகளை போட்டி போட்டு கட்சிகள் அறிவித்து வருவதால், வக்காளர்கள்தான் திக்குமுக்காடி போயுள்ளனர். ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மாணவ, மாணவிகளுக்கு பஸ்சில் இலவசம்; மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை; 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை; பெண்களுக்கு 2,100 ரூபாய் மாத உதவித்தொகை உள்ளிட்ட இலவசங்களை அறிவித்துள்ளது. இதற்கு போட்டியாக காங்கிரசும் இலவச வாக்குறுதிகள் அளித்தது. 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர், வீட்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்; ரேஷனில் குடும்பத்துக்கு இலவச தானிய தொகுப்பு; பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய், 25 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு வழங்குவதாக காங்கிரஸ் அளித்துள்ளது.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !