உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எம்-பாக்ஸ் அறிகுறியுடன் தாயகம் திரும்பியவரால் பீதி Mpox | Monckypox| Mpox in India| Mpox Fisrt case

எம்-பாக்ஸ் அறிகுறியுடன் தாயகம் திரும்பியவரால் பீதி Mpox | Monckypox| Mpox in India| Mpox Fisrt case

இந்தியாவில் குரங்கு அம்மை மத்திய அரசு அதிர்ச்சி தகவல் ஆப்பிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் எம்-பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து மனிதருக்கு பரவிய ஒருவகை வைரசால் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இவ்வகை வைரஸ்கள் பரவுவதால் குரங்கு அம்மை நோய் ஏற்படுகிறது. இந்நோய் தாக்கப்படும் நபரின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு, அது உடல் முழுதும் பரவி, அவரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் நபர்களை தீவிர சோதனைக்கு பிறகே சுகாதாரத்துறை அதிகாரிகள் நாட்டுக்குள் அனுமதிக்கின்றனர் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள ஒரு நாட்டில் இருந்து நம் நாட்டுக்கு திரும்பிய இந்தியர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் கண்டிறியப்பட்டன. அவர் உடனே தனிமைப்படுத்தப்பட்டு அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த நபர் தொடர் கண்காணிப்பில் உள்ளார் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் நாடு திரும்பிய பயணி ஆண் என்பதை தவிர வேறெந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

செப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி