உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசின் அறிவிப்பால் எம்பிக்கள் காட்டில் மழை MP's Salary hike| MP's Pension Hike| Pariliament U

மத்திய அரசின் அறிவிப்பால் எம்பிக்கள் காட்டில் மழை MP's Salary hike| MP's Pension Hike| Pariliament U

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 10ம் தேதி தொடங்கி நடக்கிறது. புதிய கல்விக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு என பல பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தினமும் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையேயும், பார்லிமென்ட்டின் இரு சபைகளையும் சுமுகமாக நடத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், முந்தைய செலவினங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கான விளக்கங்களும் மத்திய அமைச்சர்களால் வழங்கப்டுகின்றன. இந்த பரபரப்பான சூழலில், எம்பிக்களின் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் எம்பிக்கள் இனி, 1.24 லட்சம் ரூபாய் பெறுவர். அத்துடன் கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில் பார்லிமென்ட் வரும் எம்பிக்களுக்கு, தனியாக அலவன்ஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எம்பிக்களுக்கான தினப்படி 2,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ