போனை சுவிட்ச் ஆப் செய்து ஒளிந்த பெண்ணை தேடி பிடித்த போலீஸ் Mumbai Police | Arrested | woman | PM M
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் அழைத்த பெண் ஒருவர், பிரதமர் மோடியை பிரதமர் மோடியை கொலை செய்யபோவதாகவும், அதற்கான ஆயுதம் தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் செல்போன் எண்ணின் டவர் சிக்னலை வைத்து இடத்தை தேடினர். அந்தேரி என்ற இடத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். உள்ளூர் போலீசாருக்கு உத்தரவு பறந்தது. தனிப்படை போலீசார் அந்த பெண்ணை தேடினர். அதற்குள் அந்த பெண் செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தார். தொழில் நுட்பங்களின் உதவியுடன் அவர் இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். கண்டிவேலியில் இருந்த 34 வயதான பெண்ணை கைது செய்து விசாரித்தனர். கொலை மிரட்டலின் போது சொன்ன தகவல்கள் புரளி என்பது தெரியவந்தது. அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என விசாரித்தனர். ஏதுவும் இல்லை. 12ம் வகுப்பு வரை படித்துள்ள அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வருகிறார். இதற்கு முன் சிறுசிறு பிரச்னைகளுக்கு உதவி கேட்டு போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்திருக்கிறார். அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் என போலீசார் தெரிவித்தனர்.