உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காட்டி கொடுத்தவரை குறி வைத்த ரவுடிகள்; நடுவில் சிக்கிய தமுமுக நிர்வாகி

காட்டி கொடுத்தவரை குறி வைத்த ரவுடிகள்; நடுவில் சிக்கிய தமுமுக நிர்வாகி

சென்னை, மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், காதர்பாய் தெருவை சேர்ந்தவர் சீனி முகமது. வயது-32. தமுமுகவில், தாம்பரம் மனிதநேய மேம்பாட்டு அணி நிர்வாகியாக உள்ளார். இவர், தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பதை தெருவில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது, 6 இரு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சுற்றித்திரிந்த 12 பேர் கும்பல், திடீரென சீனி முகமதுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. breath வெட்டுக்காயங்களுடன் சரிந்து விழுந்த சீனி முகமதுவை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ரவுடிகள் கும்பலை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். தாம்பரம் அருகே மலைப்பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு சென்றனர். அப்போது 5 பேர் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர். எஞ்சிய 7 பேர் பிடிபட்டனர். டேனியல், கிரிதரன், சஞ்சய், சேஷன், யுவன் ராஜ், ஹரிஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை