எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடை | Singer DM Krishna | MS Subbu
கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, மெட்ராஸ் மியூசிக் அகாடமி சார்பில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருது மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டதும், முன்னணி கர்நாடக இசை கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.எஸ்.சுப்புலட்சுமியை இழிவாக பேசிய கிருஷ்ணாவுக்கு, இந்த விருதை வழங்கக்கூடாது என்று கூறியதுடன், சிலர் தாங்கள் ஏற்கனவே பெற்ற மியூசிக் அகாடமி விருதை திரும்ப கொடுத்தனர். இந்நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், தன் பாட்டி பெயரில் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த ஐகோர்ட், விருது வழங்கலாம் என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.